மழையால் தடைபட்ட இலங்கை-நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் தடைபட்டுள்ளது.
பல்லேகேலேவில் தொடங்கிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரர்களாக டிம் ராபின்சன், வில் யங் களமிறங்கினர். ராபின்சன் 9 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷிராஸ் ஓவரில் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் (Henry Nicholls) நிதானமாக ஆடினார். மறுமுனையில் பவுண்டரிகளை விரட்டிய வில் யங் (Will Young) 9வது ஒருநாள் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 112/1 (21) ஆக இருந்தபோது ஆட்டம் மழையால் தடைபட்டது. யங் 56 (68) ஓட்டங்களுடனும், நிக்கோல்ஸ் 46 (51) ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |