வெற்றியுடன் ஓய்வு பெற்ற ஆரோன் பின்ச்! நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த அவுஸ்திரேலியா
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றிய அவுஸ்திரேலியா
கடைசி ஒருநாள் தொடரை வெற்றியுடன் முடித்த ஆரோன் பின்ச்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி முழுமையாக கைப்பற்றியது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கசலிஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் 105 ஓட்டங்கள் விளாசினார். லபுசாக்னே 52 ஓட்டங்களும், கேரி 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
ICC
பின்னர் ஆடிய நியூசிலாந்து 49.5 ஓவர்களில் 242 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 47 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், க்ரீன் மற்றும் அப்போட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Twitter
இதன்மூலம் அவுஸ்திரேலியா 25 ஓட்டங்கள் வித்தியாயசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் வெற்றியுடன் திரும்பினார். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் ஸ்மித் கைப்பற்றினார்.