இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து புதிய சகாப்தம் படைத்த நியூசிலாந்து அணி! மொத்தமாக சரித்த ஒற்றை வீரர்
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி வரலாறு படைத்தது.
ஜடேஜா அபாரம்
மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்களும், இந்திய அணி 263 ஓட்டங்களும் எடுத்தன.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, ஜடேஜா மற்றும் அஸ்வினின் மிரட்டலான பந்துவீச்சில் 174 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இந்திய அணிக்கு 146 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரிஷாப் பண்ட் தவிர எந்த வீரரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.
வரலாறு படைத்த நியூசிலாந்து
அஜாஸ் படேலின் மிரட்டலான பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. பண்ட் 64 (57) ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றியதுடன், இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளது.
𝐓𝐖𝐎 𝐈𝐍 𝐓𝐖𝐎 𝐅𝐎𝐑 𝐆𝐋𝐄𝐍𝐍 𝐏𝐇𝐈𝐋𝐋𝐈𝐏𝐒! 😳
— Sportskeeda (@Sportskeeda) November 3, 2024
Ravichandran Ashwin and Akash Deep depart in consecutive balls ❌
India still needs 26 more runs for victory with one wicket in hand 🎯
🇮🇳 - 121/9#INDvNZ #GlennPhillips #Test #Sportskeeda pic.twitter.com/GAxiPIAd5Y
𝐀𝐣𝐚𝐳 𝐏𝐚𝐭𝐞𝐥 𝐢𝐬 𝐮𝐧𝐬𝐭𝐨𝐩𝐩𝐚𝐛𝐥𝐞 𝐚𝐭 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭! 🇳🇿🔥
— Sportskeeda (@Sportskeeda) November 3, 2024
Back-to-back five-wicket hauls for him in his hometown 👊
He also recorded consecutive ten-wicket hauls at Wankhede 👌#AjazPatel #INDvNZ #Test #Sportskeeda pic.twitter.com/KkgB3mRtHK
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |