விஸ்வரூபமெடுத்த கேன் வில்லியம்சன்! அயர்லாந்தை புரட்டியெடுத்த நியூசிலாந்து
32 பந்துகளில் அரைசதம் விளாசிய கேன் வில்லியம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார்
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய கேப்டன் கேன் வில்லியம்சன் 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார். ஃபின் ஆலென் 32 ஓட்டங்களும், டேரில் மிட்செல் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
AP
அயர்லாந்து தரப்பில் ஜோஷ்வா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் (37), கேப்டன் பால்பிரினே (30) நல்ல தொடக்கம் அமைத்தனர்.
ஆனால் பின்னால் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால், அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், சௌதீ, சோதி மற்றும் சான்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
(Source: Twitter/@BLACKCAPS)