புயல்வேகத்தில் பயணித்த இலங்கை அணி..வெற்றியை தட்டிப்பறித்த மூவர்

Sri Lanka Cricket New Zealand Cricket Team
By Sivaraj Dec 28, 2024 11:27 AM GMT
Report

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பிரேஸ்வெல் வாணவேடிக்கை

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, 65 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என தடுமாறியது.

அப்போது கைகோர்த்த டேர்ல் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் கூட்டணி வாணவேடிக்கை காட்டியது. இதன்மூலம் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்று 172 ஓட்டங்களாக உயர்ந்தது. 

New Zealand vs Sri Lanka, 1st T20 2024

டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 42 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்தார். மைக்கேல் பிரேஸ்வெல் (Michael Bracewell) 33 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசினார். ஹசரங்கா, பினுரா பெர்னாண்டோ மற்றும் தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.  

நெருக்கடியில் முதல் சர்வதேச சதம் விளாசிய இந்திய வீரர்! கண்ணீர்விட்டு கடவுளுக்கு நன்றி கூறிய தந்தை

நெருக்கடியில் முதல் சர்வதேச சதம் விளாசிய இந்திய வீரர்! கண்ணீர்விட்டு கடவுளுக்கு நன்றி கூறிய தந்தை

நிசங்கா அதிரடி

பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா அதிரடியில் மிரட்டினர். இருவரின் ஆட்டத்தின் மூலம் 14வது ஓவரிலேயே இலங்கை 120 ஓட்டங்களை எட்டியது. 

Pathum Nissanga

குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 36 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டஃப்பி ஓவரில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த குசால் பெரேரா, கமிந்து மெண்டிஸ் அதே ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.

Jacob Duffy

கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஃபோக்ஸ் வீசிய ஓவரில் தீக்ஷணா, ஹசரங்கா அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 5 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை அணி எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேக்கப் டஃப்பி (Jacob Duffy) 3 விக்கெட்டுகளும், ஹென்றி மற்றும் ஃபோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.  

New Zealand vs Sri Lanka, 1st T20 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US