நியூசிலாந்துக்கு பயத்தை காட்டிய வீரர்! கடைசிவரை போராடிய இலங்கை
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை 157
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக நிசங்கா 57 ஓட்டங்கள் எடுத்தார். நியூசிலாந்தின் ஹென்ரி, ஷிப்லே, மிட்செல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
லஹிரு குமார மிரட்டல் பந்துவீச்சு
பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணிக்கு லஹிரு குமார அதிர்ச்சி கொடுத்தார். தொடக்க வீரர்கள் பௌஸ் மற்றும் பிளெண்டலை ஒற்றை இலக்க ஓட்டங்களில் அவர் வெளியேற்றினார்.
A wicket with the first and last ball of Lahiru Kumara's opening over as he removes both openers. Follow the chase LIVE in NZ with @sparknzsport or Rova. LIVE scoring https://t.co/xSgTCHRXok ? #NZvSL #CricketNation pic.twitter.com/wBcKW5A594
— BLACKCAPS (@BLACKCAPS) March 31, 2023
அதன் பின்னர் களமிறங்கிய மிட்செலை 6 ஓட்டங்களில் ரஜிதா ஆட்டமிழக்க செய்தார். இதனால் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
@Getty
எனினும் வில் யங் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் கேப்டன் டாம் லாதம் 8 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அவரது விக்கெட்டைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோல்ஸ், வில் யங்குடன் கைகோர்த்து வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
நியூசிலாந்து வெற்றி
இறுதியில் நியூசிலாந்து அணி 32.5 ஓவரில் 159 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் யங் 86 ஓட்டங்களும், நிக்கோல்ஸ் 44 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
@AFP
இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆட்டநாயகன் விருதை வில் யங்கும், தொடர் நாயகன் விருதை ஹென்ரி ஷிப்லேவும் வென்றனர். இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அடுத்த மாதம் 2ஆம் திகதி தொடங்குகிறது.
Henry Nicholls seals the win and a 2-0 series victory! Catch up on all scores at https://t.co/3YsfR1YBHU or the NZC app ? #NZvSL #CricketNation pic.twitter.com/URvebSkaBl
— BLACKCAPS (@BLACKCAPS) March 31, 2023