பாகிஸ்தானுக்கு தரமான பதிலடி கொடுத்த நியூசிலாந்து அணி! கடைசி வரை போராடிய ஆல்ரவுண்டர்
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து 163 ஓட்டங்கள் குவிப்பு
லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடியது.
தொடக்க வீரர் பௌஸ் 7 ஓட்டங்களிலும், வில் யங் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். டேர்ல் மிட்செலுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த லாதம் அதிரடியில் மிரட்டினார்.
@ICC
மிட்செல் 26 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷாஹீன் அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் அதிரடி சிக்ஸர், பவுண்டரிகளை அடித்து நொறுக்கிய லாதம் 49 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
@ICC
அதன் பின்னர் வந்த சாப்மன் 16 ஓட்டங்களும், நீசம் 10 ஓட்டங்களும் எடுக்க, நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ராஃப் தலா இரண்டு விக்கெட்டுகளும், ஷதாப் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@TheRealPCB
தடுமாறிய பாகிஸ்தான்
அதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 88 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியபோது, இஃப்திக்கார் அகமது ருத்ர தாண்டவம் ஆடினார்.
எனினும், நியூசிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன்மூலம் நியூசிலாந்து 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
@BLACKCAPS
கடைசி வரை போராடிய இஃப்திக்கார் அகமது
இறுதிவரை போராடிய அவர் 24 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் குவித்தார். பாஹீம் அஷ்ரப் 14 பந்துகளில் 27 ஓட்டங்கள் குவித்தார்.
FIFTY OFF JUST 2⃣0⃣ BALLS ?#Iftimania in Lahore! ? @IftiAhmed221 #PAKvNZ | #CricketMubarak pic.twitter.com/vTsf8mOMhy
— Pakistan Cricket (@TheRealPCB) April 17, 2023
நியூசிலாந்து தரப்பில் நீசம் 3 விக்கெட்டுகளும், ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆடம் மில்னே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த போட்டி ராவல்பிண்டியில் 20ஆம் திகதி நடக்க உள்ளது.