அயர்லாந்தை மொத்தமாக காலி செய்த சோதி, பிரேஸ்வெல்!
அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பெல்பாஸ்ட்டில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கிளேவர் 55 பந்துகளில் 78 ஓட்டங்களும், பின் ஆலென் 20 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாசினர்.
அயர்லாந்து தரப்பில் கிரேக் யங் , ஜோஸ்வா லிட்டில் தலா 2வ விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 13.5 ஓவர்களில் 91 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் அடைர் 27 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்தின் சோதி, பிரேஸ்வெல் இருவரும் அபாரமாக பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஜேக்கப் டஃப்பி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Michael Bracewell with a hat-trick! ?
— Spark Sport (@sparknzsport) July 20, 2022
Catch the replay of Ireland v BLACKCAPS in the 2nd T20I on-demand on Spark Sport #SparkSport #IREvNZ pic.twitter.com/GT7WeRya3x
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கடைசி போட்டி ஜூலை 22ஆம் திகதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
PC: Twitter (@BLACKCAPS)