கடைசி பந்துவரை போராடிய இலங்கை அணி: நூலிழையில் பறிபோன வெற்றி
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது.
குசால் மெண்டிஸ் மிரட்டல் ஆட்டம்
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி குயின்ஸ்டவுனின் ஜான் டேவிஸ் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 48 பந்துகளில் 73 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
@Twitter (ICC)
குசால் பெரேரா 33 ஓட்டங்களும், நிசங்கா 25 ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம் இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
A brilliant knock by Kusal Mendis in the third T20I against New Zealand ?
— ICC (@ICC) April 8, 2023
Watch #NZvSL live on https://t.co/MHHfZPyHf9 (in select regions) ? pic.twitter.com/arfteSMCjN
ருத்ர தாண்டவம் ஆடிய செய்பெர்ட்
அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், அதிரடியில் மிரட்டிய செய்பெர்ட் 48 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் வந்த வீரர்களின் விக்கெட்டுகளை லஹிரு குமார கைப்பற்ற, கடைசி ஓவரில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
@Twitter (BLACKCAPS)
நியூசிலாந்து த்ரில் வெற்றி
நியூசிலாந்தின் வெற்றிக்கு 2 பந்துகளில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், ரச்சின் ரவீந்திரா கடைசி ஓவரின் 5வது பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இலங்கை தரப்பில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளும், மதுஷன் மற்றும் தீக்ஷணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட் வென்றார்.
Another close game against New Zealand..
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 8, 2023
NZ clinch the decider in Queenstown to bag the T20I series 2-1 ? pic.twitter.com/459pC2oV6E