வெற்றிக்கு 6 ரன் தேவை..சிக்ஸர் விளாசி சதமும் அடித்த கேப்டன் (வீடியோ)
மகளிர் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
ஏமி ஜோன்ஸ் 50
ஹாமில்டனில் மகளிர் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 46.3 ஓவரில் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஏமி ஜோன்ஸ் 50 (52) ஓட்டங்களும், சார்லி டீன் 38 (64) ஓட்டங்களும், ஹீதர் நைட் 31 (50) ஓட்டங்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் மற்றும் ஹன்னா ரோவ் தலா 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் சுஸி பேட்ஸ் (6), ஜார்ஜியா ப்லிம்மர் (4) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
A DEVINE CENTURY 💯
— Women’s CricZone (@WomensCricZone) April 7, 2024
Sophie Devine seals the victory and gets to her 8th ODI ton with two sixes! 🤯#NZvENG | #CricketTwitter
pic.twitter.com/LNwjTkoapb
அடுத்து வந்த அமெலியா கெர் 60 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து எக்லெஸ்ஸ்டோன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து அணித்தலைவர் சோபி டிவைன் மற்றும் மேடி கிரீன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
சோபி டிவைன் சதம்
இவர்களின் அபார ஆட்டத்தினால் 39வது ஓவரிலியே நியூசிலாந்து அணி இலக்கை நெருங்கியது. வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, சோபி டிவைனின் சதத்திற்கும் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
சார்லி டீன் வீசிய கடைசி பந்தை டிவைன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதன்மூலம் அவர் சதத்தை எட்டியதுடன், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
Captain Sophie Devine returned and delivered! 🔥
— Women’s CricZone (@WomensCricZone) April 7, 2024
Devine's swashbuckling century secured a consolation win for @WHITE_FERNS#NZvENG | #CricketTwitter pic.twitter.com/EsS8g20gol
ஏற்கனவே இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
🏆 T20I series: 4-1
— Women’s CricZone (@WomensCricZone) April 7, 2024
🏆 ODI series: 2-1
Heather Knight's England return home with two new pieces of silverware#NZvENG pic.twitter.com/bxqfHwcGZX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |