51 ஓட்டங்களுடன் 2 விக்கெட்! இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய கேப்டன்
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
பெர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் கிரிக்கெட் தொடரில், மூன்றாவது இடத்தை முடிவு செய்யும் போட்டி நடந்தது.
இதில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தபோது களமிறங்கிய கேப்டன் நடாலி சிவெர் அதிரடியாக 19 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஜோன்ஸ் 26 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்தின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
PC: Twitter (@ICC)
அபாரமாக பந்துவீசிய ஜென்சென் 3 விக்கெட்டுகளையும், பிரான் ஜோனஸ், சோஃபி டிவைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி அதிரடியாக 11.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோஃபி டிவைன் 40 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார். பேட்ஸ் 20 ஓட்டங்களும், அமெலியா கெர் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
PC: Twitter (@ICC)