ஆனந்த் அம்பானி - ராதிகாவை நேரில் வாழ்த்திய தமிழக அரசியல் தலைவர்.., அவர் கொடுத்த நினைவு பரிசு
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டை நேரில் சென்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள திரை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இந்நிலையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது, முகேஷ் அம்பானிக்கு நினைவு பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |