Oats Dosa: உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை செய்வது எப்படி?
Onion
Weight Loss
By Kirthiga
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவான விலையில் கடைகளில் வாங்கக் கூடிய ஒரே பொருள் இந்த ஓட்ஸ்.
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு அதிகமாக உதவும்.
பச்சையாக அல்லது சமைத்து சாப்பிட்டாலும் ஓட்ஸ் ஒரு சிறந்த எடை இழப்பு உணவாக இருக்கும்.
அந்தவகையில் உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸை தோசை வடிவத்தில் எப்படி எடுத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
- வெங்காயம் - 1 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 3 நறுக்கியது
- இஞ்சி - 1 நறுக்கியது
- கல் உப்பு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பெருங்காய தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- நெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.
- அடுத்து ஊறிய ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.
- பின் அரைத்த மா கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
- அடுத்தாக தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
- இந்த முறையில் செய்து எடுத்தால் சுவையான மற்றும் உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் தோசை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US