கமலா ஹாரிஸை முன்மொழிந்த ஜனாதிபதி பைடன்... ஒபாமா உட்பட முக்கிய தலைவர்கள் மெளனம்
தேர்தல் களத்தில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளதை வரவேற்று பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, கமலா ஹாரிஸ் வேட்பாளராவதை ஆதரிக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
தேசப்பற்றின் உச்சம்
அமெரிக்கா ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாக ஒப்புக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதி ஜோ பைடன் வகுத்துள்ள கொள்கைகள் மற்றும் அவரது தலைமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதை தேசப்பற்றின் உச்சம் என்றும் ஒபாமா கொண்டாடியுள்ளார். இது நாட்டுக்கானது என்பதை ஜோ பைடன் நம்பவில்லை என்றால் இப்படியான ஒரு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ஜோ பைடன் முன்மொழிந்துள்ள கமலா ஹாரிஸ் தொடர்பில் ஒபாமா கருத்தேதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஒபாமா மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கமலா ஹாரிஸ் தொடர்பில் தற்போது மெளனம் காத்து வருவதாகவே கூறப்படுகிறது.
ஜனாதிபதி பொறுப்பில் ஆர்வல் இல்லை
அத்துடன், ஜோ பைடன் தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளதை அடுத்து, தற்போது யாருக்கு வாய்ப்பு என சில பெயர்களும் வெளிவரத் தொடங்கியுள்ளது. அதில், 2028ல் ஜனாதிபதி வேட்பாளராக களம் காணும் வாய்ப்புள்ள, இரண்டாவது முறையாக மிச்சிகன் ஆளுநராக பொறுப்பில் இருக்கும் Gretchen Whitmer,
தற்போதைய கலிபோர்னியா ஆளுநரும் 2028ல் ஜனாதிபதி கனவுடன் இருக்கும் Gavin Newsom, போக்குவரத்து செயலர் Pete Buttigieg,
பென்சில்வேனியா ஆளுநர் Josh Shapiro மற்றும் Hyatt ஹொட்டல் குழுமத்தின் வாரிசும் பெரும் கோடீஸ்வரரும் தற்போதைய இல்லினாய்ஸ் ஆளுநருமான JB Pritzker ஆகியவர்களின் பெயர்களே டொனால்டு ட்ரம்புக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது.
இவர்களுடன், குடியரசுக் கட்சி மொத்தமாக அச்சப்படும் மிச்செல் ஒபாமாவின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் தமக்கு ஜனாதிபதி பொறுப்பில் ஆர்வல் இல்லை என்றே மிச்செல் ஒபாமா கூறி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |