பிரித்தானிய இளவரசர் வில்லியமுக்குதான் ஆதரவு... ஹரிக்கு அல்ல: ஒபாமா விருந்திற்கு ஹரி அழைக்கப்படாததன் பின்னணி
கடந்த சனிக்கிழமை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது 60ஆவது பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடினார்.
ஆனால், ஒபாமாவின் நீண்ட நாள் நண்பரான இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் அந்த விருந்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ராஜ குழும்பத்தில் சகோதரர்களுக்கிடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஒபாமா தம்பதியரின் ஆதரவு இளவரசர் வில்லியமுக்குதான், ஹரிக்கு அல்ல என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Angela Levin.
இரண்டு சகோதரர்களும் பிரிந்திருக்கும் நிலையில், ஒருவருக்குதான் அதரவளிக்க முடியும் என்றால், ஒபாமா தம்பதியரைப் பொருத்தவரை, அவர்கள் ஆதரவு வில்லியமுக்குதான் என்று கூறியுள்ள Angela Levin, பிரித்தானிய மகாராணியாரின் மீதான மரியாதை நிமித்தமாகவே ஒபாமா தம்பதியர் பின்வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒபாமா தம்பதியர் எப்போதுமே ஹரியை உயர்ந்த இடத்தில் வைத்துத்தான் பார்த்திருக்கிறார்கள், ஆனால், மேகனைக் குறித்து அவர்களுக்கு தெரியும் என்று கூறும் Angela Levin, ஒருவேளை அவர்கள் மீண்டும் ஹரி மேகனுடன் ஒன்று சேரலாம். ஆனாலும் முன்பிருந்த அதே உறவு இனி இருக்காது என்கிறார்.