சக இந்தியருடன் நெருக்கம்... முன்னாள் காதலியை வேவு பார்த்து பழி வாங்கிய நபர்: லண்டனில் சம்பவம்
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய ஊழியர் ஒருவர், தமது முன்னாள் காதலியை பொறாமை காரணமாக கொடூரமாக கொலை செய்துள்ளார்.
உறவை முறித்துக் கொள்வதாக
மேற்கு லண்டனின் ஹேய்ஸ் பகுதியில் 39 வயது Stephanie Hansen என்பவருடன் ஒரே குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்தியாவின் கோவா மாகாணத்தை சேர்ந்த 30 வயதான Sheldon Rodrigues.
இருவரும் 10 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் உறவை முறித்துக் கொள்வதாக ஸ்டீபனி ஹேன்சன் தெரிவித்துள்ளார். ஆனால் ஸ்டீபனி மீதான ஆசையால் பலமுறை உறவைத் தொடர வேண்டும் என்று ரோட்ரிக்ஸை கெஞ்ச வைத்துள்ளது.
மட்டுமின்றி திருமணம் முடித்த கபிலன் என்பவருடன் ஸ்டீபனி பழகுவதை அறிந்ததும் ரோட்ரிக்ஸ் பெருங்கோபமடைந்துள்ளார். இந்தியரான கபிலனும் விமான நிலைய ஊழியராகவே பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், ஸ்டீபனி மீதான ஆசையில் அவரை வேவு பார்க்க முடிவு செய்த ரோட்ரிக்ஸ், பயன்படுத்தாத அலைபேசி ஒன்றை வேவு பார்க்கும் கருவியாக மாற்றி, அதை ஸ்டீபனியின் படுக்கையறையில் மறைத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து சுமார் 100 மணி நேரம் அளவுக்கு கபிலன் மற்றும் ஸ்டீபனியின் உரையாடல்கள் மற்றும் அந்தரங்க நிமிடங்களை ஒட்டுக்கேட்டுள்ளார். 2022ல் ஸ்டீபனி கொல்லப்படும் அந்த இரவு நேரம், ரோட்ரிக்ஸ் தொடர்ந்து அவர்களின் உரையாடல்களை ரகசியமாக கேட்டு வந்துள்ளார்.
சடலத்துடன் சுமார் 24 மணி நேரம்
சம்பவத்தன்று கபிலனும் ஸ்டீபனியும் உறவில் இருந்ததையும் ரோட்ரிக்ஸ் தெரிந்து கொண்டுள்ளார். இதில் ஆத்திரம் கொண்ட ரோட்ரிக்ஸ், இரவு வேலை முடித்து நேரடியாக தமது பைக்கில் வீட்டுக்கு பறந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளுக்கு தந்தையான கபிலன் அப்போது ஸ்டீபனி வீட்டில் இருந்து தமது மனைவியும் பிள்ளைகளும் வசிக்கும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்த ரோட்ரிக்ஸ், சமையல் கத்தியால் ஸ்டீபனியை 20 முறை தாக்கியுள்ளார்.
இதில் அவர் கொல்லப்பட்ட, சடலத்துடன் ரோட்ரிக்ஸ் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக தனித்திருந்துள்ளார். மட்டுமின்றி உணவு வரவழைத்து சாப்பிட்டுள்ளார். இறுதியில் பொலிசாருக்கு தகவல் தெரிவித்து, கபிலனை சிக்கவைக்க முயன்றுள்ளார்.
ஆனால் ஆதாரங்களை அனைத்தும் அவருக்கு எதிரானதாகவே இருந்துள்ளது. இந்த நிலையில் ரோட்ரிக்ஸ் குற்றவாளி என்பது ஜனவரி மாதம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரோட்ரிகஸுக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |