இங்கிலாந்து கிராமம் ஒன்றில் அவ்வப்போது காணாமல் போன உள்ளாடைகள்: திருடியது யார் என தெரியவந்தபோது...
இங்கிலாந்து கிராமம் ஒன்றில் அவ்வப்போது உள்ளாடைகள் முதலான விலைமதிப்புள்ள பொருட்கள் காணாமல்போன நிலையில், அவற்றைத் திருடியவர் யார் என தெரியவந்தபோது, சம்பந்தப்பட்டவர் அசௌகரியமாக உணர நேர்ந்துள்ளது.
அவ்வப்போது காணாமல் போன உள்ளாடைகள்
இங்கிலாந்திலுள்ள Darley Abbey என்னும் கிராமத்தில் வாழும் Donna Hibbert என்னும் பெண்ணுக்கு சொந்தமான பூனைகளில் ஒன்று, Harry.
இந்த Harry, அடிக்கடி அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து, உள்ளாடைகள், விலையுயர்ந்த காலணிகள் என பல பொருட்களை திருடிக்கொண்டுவந்துவிடுமாம்.
DONNA HIBBERT
சுமார் 300 பவுண்டுகள் மதிப்புடைய பொருட்களை Harry இதுவரை திருடிக்கொண்டு வந்துள்ளதாம்.
உரிமையாளருக்கு தலைகுனிவு
இப்படி Harry அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து பொருட்களை திருடிக்கொண்டுவந்துவிட, அதன் உரிமையாளரான Donnaவுக்கு தலைக்குனிவாகப் போய்விட்டது.
DONNA HIBBERT
ஆகவே,அவர் பேஸ்புக்கில் அதற்காக ஒரு பக்கத்தைத் துவக்கி, தன்னிடம் இந்த இந்த பொருட்கள் உள்ளன என்று கூறி அவற்றின் புகைப்படத்துடன் இடுகை இடுகிறாராம்.
DONNA HIBBERT
அப்படி பொருட்களைக் காணும் மக்கள், Donna வீட்டுக்கு வந்து தங்களுடைய பொருட்களை திரும்ப வாங்கிச் செல்கிறார்களாம்.
இப்போதும், அப்படி Harry திருடி வந்த பொருட்களை ஆறு கவர்களில் போட்டுவைத்துவிட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்காக காத்திருக்கிறார் Donna.
DONNA HIBBERT