ஒரே ஓவரில் 5 சிக்ஸர்! வாணவேடிக்கை காட்டிய வீரரின் வீடியோ
42 ஓட்டங்களுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஓடியன் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை பெற்றார்
ஜமைக்கா அணியில் முகமது நபி, 2 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஓடியன் ஸ்மித் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி மிரட்டினார்.
கயானாவில் நேற்று கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஜமைக்கா தல்லவாஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது.
முதலில் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 45 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசினார்.
அவரது விக்கெட்டுக்கு பிறகு ஓடியன் ஸ்மித் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 18வது ஓவரில் மொத்தம் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். மொத்தம் 16 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித், 6 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்கள் விளாசினார்.
5 SIXES IN THE OVER! Watch the 5th six make its way into the stands as this evening’s @fun88eng Magic Moment!#CPL22 #CricketPlayedLouder #BiggestPartyInSport #GAWvJT #Fun88 pic.twitter.com/t2u7mcoyd1
— CPL T20 (@CPL) September 22, 2022
பின்னர் களமிறங்கிய ஜமைக்கா அணி 166 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கயானா அணி வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிரடியில் மிரட்டிய பிரண்டன் கிங், 66 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் விளாசினார்.
Getty Images