தொடரை இழந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்.. காரணமான கோலி
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தனது கனவு நிறைவேறிவிட்டதாக வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஒடியன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
நேற்று அகமதாபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தோல்விடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என இழந்தது.
2வது ஒரு நாள் போட்டியில் பொல்லார்டுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஒடியன் ஸ்மித், ஒரே ஓவரில் இந்திய வீரர்கள் பந்த் மற்றும் கோலி விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
பந்து வீச்சில் 7 ஓவர்கள் வீசி 29 கொடுத்த ஒடியன் ஸ்மித், 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பேட்டிங்களில் 20 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்ஸர் விளாசி 24 ரன்களில் எடுத்த ஸ்மித், வாஷிங்டன் வீசிய பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
2வது ஒரு நாள் போட்டியில் கோலியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் தனது கனவு நிறைவேறிவிட்டதாக ஒடியன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
My dream of taking the wicket of world best batsman Virat Kohli fulfilled - I am very happy about it.
— Odean Smith (@Osmith65) February 10, 2022
?? pic.twitter.com/fyRxPnCsk6
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியது.எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும், இது ஒடியன் ஸ்மித்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.