சிக்ஸர் அடிக்க நினைத்த கெயில் பேட்டை இரண்டாக உடைத்து மிரட்டிய பவுலர்! வைரலாகும் வீடியோ
மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், கெய்லின் பேட் உடைந்த வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்று, மேற்கிந்திய தீவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான Caribbean Premier League போட்டி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ஆம் திகதி துவங்கி, இன்றோடு முடிவடைகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நிகோலஸ் பூரான் தலைமையிலான Guyana Amazon Warriors அணியும், கிறிஸ் கெய்ல் தலைமையிலான St Kitts and Nevis Patriots அணியும் மோதின.
Batting malFUNction for @henrygayle #GAWvSKNP #CPL21 #CricketPlayedLouder #BiggestPartyInSport pic.twitter.com/kuPgIs7DuY
— CPL T20 (@CPL) September 14, 2021
முதலில் ஆடிய Guyana Amazon Warriors அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் அடிக்க, அதன் பின் ஆடிய Kitts and Nevis Patriots அணி 17.5 ஓவரிலே 3 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் அதிரடி ஆட்டக்கரரான கிறிஸ் கெய்ல் எதிரணியின் பந்து வீச்சை ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட முற்பட்டார். அதன் படி போட்டியின் 3.1 ஓவரை எதிரணியின் Odean Smit வீசிய பந்தை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல். லெக் திசையில் ஏறி, ஆப் திசையில் சிக்ஸர் அடிப்பதற்காக பேட்டை அதிரடியாக வீசினார்.
ஆனால், பந்தானது வந்த வேகத்தில், அவரது பேட்டை இரண்டாக உடைத்து நொறுக்கியது. இருப்பினும் அதன் பின் பேட்டை மாற்றிய கிறிஸ் கெய்ல் 27 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இன்று ST LUCIA ZOUKS ST KITTS அணியும் NEVIS PATRIOTS அணியும் மோதுவது குறிப்பிடத்தக்கது.