1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா - இதில் சச்சினின் சாதனை எவ்வளவு தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தனது 1000வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடும் நிலையில் இதில் சச்சின் டெண்டுல்கர் சாதனை மிகப்பெரியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது.
1971 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்திய அணி முதல் முறையாக 1974 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடி 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.
இதனிடையே 1000 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக போட்டிகள், ரன்கள், அதிக சதங்கள் என எதில் பார்த்தாலும் சச்சின் டெண்டுல்கரின் பெயர் தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 166வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக வீரராக களமிறங்கிய சச்சின் 2012 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை இந்தியா 638 போட்டிகளில் விளையாடியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றபோது இந்தியா விளையாடி இருந்த ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் அவர் மட்டுமே 57.58% போட்டிகளில் விளையாடியிருந்தார்.