ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம்
ஓடிசாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பொறியாளருக்கு எதிராக ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பொறியாளரிடம் சிக்கிய பல கோடி சொத்துக்கள்
ஓடிசாவின் பாலிகுடா பகுதியைச் சேர்ந்த உதவி நிர்வாகப் பொறியாளர் வைகுண்ட நாத் பெஹெரா, அவரது வருமானத்திற்கு மீறிய அதிக சொத்துக்களை குவித்து இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
1999ம் ஆண்டு இளநிலை பொறியாளராக அரசு பணி சேர்ந்த வைகுண்ட நாத் ஆரம்பத்தில் ரூ.6000 மட்டுமே சம்பளமாக பெற்ற நிலையில், கடந்த ஆண்டு தான் உதவி நிர்வாகப் பொறியாளராக பதவி பெற்றார்.

இருப்பினும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், ஊழல் தடுப்பு பிரிவினர், மாநிலம் முழுவதும் புவனேஸ்வர், பாலேஸ்வர், ஜாஜ்பூர், பரிபாடா மற்றும் பாலிகுடா ஆகிய 9 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சொத்து பட்டியல்கள்
இந்த சோதனையில் வைகுண்ட நாத் குடும்பத்தினரின் வங்கி லாக்கர்களில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 கோடி ரொக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட சோதனையில் ரூ. 2.66 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் புவனேஸ்வரில் உள்ள நிலாத்ரி விஹாரில் 10,500 சதுர அடியில் 4 அடுக்குமாடி கட்டிடங்கள் உட்பட மொத்தம் 5 அடுக்குமாடி கட்டிடங்கள் வைகுண்ட நாத் சொத்து விவரங்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், புவனேஸ்வரின் முக்கிய இடங்களில் வைகுண்ட நாத்துக்கு சொந்தமான 13 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்து ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் மட்டுமே, இவை இறுதி மதிப்பீட்டின் போது இந்த எண்ணிக்கை உயரலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |