காதலனை இரும்புப் பெட்டிக்குள் மறைத்துவைத்த இளம்பெண்: ஒரு வைரல் வீடியோ
இந்தியாவின் ஒடிஷாவில், இளம்பெண் ஒருவர் தன் காதலனை இரும்புப் பெட்டி ஒன்றிற்குள் மறைத்துவைத்துள்ளதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
காதலனை இரும்புப் பெட்டிக்குள் மறைத்துவைத்த இளம்பெண்
இளம்பெண் ஒருவர், தன் அறையில் வைத்துள்ள இரும்புப் பெட்டி ஒன்றைத் திறக்குமாறு அவரது உறவினர்கள் வற்புறுத்தும் காட்சியுடன் அந்த வீடியோ துவங்குகிறது.
அந்த பெண் பெட்டியைத் திறக்க மறுக்க, அவர்கள் வற்புறுத்த, ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் அந்த பெட்டியைத் திறக்க, பெட்டிக்குள்ளிருந்து வெளியே வருகிறார் ஒரு இளைஞர்.
அதிர்ச்சியில் உறைந்த குடும்ப உறுப்பினர்களில் சிலர் சுதாரித்துக்கொண்டு அந்த இளைஞரைத் தாக்க முயல, அவர்களுக்கும் அந்த இளைஞருக்கும் நடுவில் நின்று அவரைத் தாக்குவதை தடுக்கிறார் அந்த இளம்பெண்.
கடைசியில், ஏற்கனவே தங்களுக்கு திருமணமாகிவிட்டதாக அந்தப் பெண் கூற, அவளது குடும்பத்தினர் திகைப்படைய, வீடியோ முடிவடைகிறது.
ஒடியா மொழியில் அவர்கள் பேசும் அந்த வீடியோவில், அதற்குப் பிறகு என்ன ஆயிற்று என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |