சொந்த குடும்பத்தையே கல்லால் அடித்து கொன்ற கல்லூரி மாணவர்! பொலிஸாரிடம் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் பெற்ற தாய் மற்றும் உடன்பிறந்த அக்காவை கல்லூரி மாணவர் ஒருவர் கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் குடும்பத்தையே கொன்ற கல்லூரி மாணவர்
ஒடிசா மாநிலம், ஜெகத்சிங்பூர் மாவட்டம், ஜெயபடாசெதி ஷகி கிராமத்தை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவர் சூர்யகாந்த் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, குடும்பத்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் பிரசாந்த் கலியா (65), அவரது மனைவி கனக்லதா (62), மகள் ரோஸ்லின் (25) ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டு ஏற்பட்ட அடிமைத்தனம்
சூர்யகாந்த் சமீபகாலமாக ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி, படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால் கவலை அடைந்த அவரது பெற்றோர் மற்றும் அக்கா சூர்யகாந்தை பலமுறை கண்டித்துள்ளனர், இதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கல்லால் அடித்து கொலை
தொடர் கண்டிப்புகளால் ஆத்திரமடைந்த சூர்யகாந்த் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை, தாய் மற்றும் அக்காவை கல்லை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதையடுத்து அருகில் உள்ள கிராமத்திற்கு தப்பிச் சென்ற சூர்யகாந்த், இறுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது ஆன்லைன் விளையாட்டில் அடிமையானதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொன்றதாக சூர்யகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |