ஒடிசா ரயில் விபத்து! முக்கிய விபரங்கள் வெளியானது- Live Video
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 230யை கடந்துள்ளது, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மொத்தம் 800 பேர் பயணிக்க முன்பதிவு செய்திருந்ததாகவும், இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகள் நடைபெறுவதில் தொய்வு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
விபத்தில் 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ரயிலில் பயணித்தவர்களின் விபரங்கள்
கோரமண்டல விரைவு ரயிலிம் பி7 பெட்டியில் 22 பேரும், பி8 பெட்டியில் 9 பேரும், ஏ2 பெட்டியில் 31 பேரும் பயணித்துள்ளனர்.
பி2 முதல் பி9 வரை உள்ள ஏழு பெட்டிகளும் ஏ1,ஏ2 பெட்டிகளும் தடம் புரண்டன. பெங்களூர் - ஹவுரா ரயிலின் ஒரு பொதுப் பெட்டியும் 2 சரக்கு பெட்டிகளும் , ஏ1 பெட்டியும் தடம் புரண்டன.
* கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு ரயிலின் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
* ஒரே ஒரு பெட்டி கடுமையாக சேதமடைந்த நிலையில் அங்கு மட்டும் மீட்பு பணிகள் நடைபெறவில்லை.
* ஒரு சில ரயில் பெட்டிகள் மீது மற்றொரு ரயில் பெட்டிகள் கிடப்பதால் மீட்புபணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது, மக்களை மீட்பதில் சிரமங்கள் உள்ளன.
* ரயில் விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
* ஒடிசா அரசாங்கம் உதவி எண்களை அறிவித்துள்ளது, 06782-262286 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
033-26382217 (Howrah), 8972073925 (Kharagpur), 8249591559 (Balasore) and 044- 25330952 (Chennai).