வீட்டிலிருந்தபடி பணி செய்பவர்களுக்கு சலுகை ஒன்றை நீட்டிக்க இருக்கும் ஜேர்மனி
ஜேர்மனி, வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்பவர்களுக்கு சலுகை ஒன்றை நீட்டிக்க உள்ளது.
2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு திட்டத்தின்படி, வீட்டிலிருந்தபடி அலுவலகப்பணி செய்பவர்கள், வீட்டிலிருந்து பணி செய்யும் நாளொன்றிற்கு 5 யூரோக்கள் வழங்கப்படும்.
அதாவது ஒருவர் அலுவலகத்திற்கு செல்லாமல் வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்வதால், வீட்டை வெப்பப்படுத்துதல் போன்ற விடயங்களுக்கான செலவு அதிகம் ஆகலாம் அல்லவா?
ஆகவே, அந்த செலவுக்காக, அரசு நாளொன்றிற்கு 5 யூரோக்கள் கொடுக்க முடிவு செய்து அவ்வாறே செய்தும் வருகிறது. ஒருவர், அதிகபட்சமாக, 120 நாட்களுக்கு ஒருவருக்கு 600 யூரோக்கள் வரையில் இவ்வகையில் கிடைக்கும்.
தற்போது, இந்த சலுகை, 2022இலும் நீடிக்கும் என கேபினட் அறிவித்துள்ளது.