மரணத்தின் விளிம்பிற்கு சென்ற பெண்: கமெராவில் பதிவான காட்சி..திடுக்கிடும் காணொளி
அமெரிக்காவில் 7 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சிக்கிய பெண், மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
7 அடி ஆழமுள்ள பள்ளம்
அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் நார்ஃபோக் நகரின் மையப்பகுதியில், கனமழையால் கிட்டத்தட்ட 7 அடி ஆழமுள்ள ஒரு பள்ளம் உருவானது. அதில் எஸ்யூவி கார் ஒன்று தலைகீழாக சிக்கிக்கொண்டது.
அந்த காரில் இருந்த பெண்ணொருவர் மரணத்தின் விளிம்பிற்கு சென்றுள்ளார். அச்சமயம் ஆன்ட்வான் 'ஏஜே' ஸ்டீவன்ஸன் என்ற அதிகாரி துரிதமாக செயல்பட்டு, அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்.
பகுதியளவு மூழ்கியிருந்த அந்த எஸ்யூவி வாகனத்தில் இருந்து அப்பெண் இறுதியாக காப்பாற்றப்பட்டார். பொதுமக்கள் சிலரும் ஸ்டீவன்ஸனுக்கு உதவியுள்ளனர்.
ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே
ஸ்டீவன்ஸனின் இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை, ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்திலேயே நடந்ததாக அதிகாரிகள் கூறினர்.
திகிலூட்டும் இந்த மீட்பு நடவடிக்கையின் bodycam வீடியோவை நார்ஃபோக் காவல்துறை பகிர்ந்துள்ளது.
மேலும், இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கை 'ஊர் முழுக்க பேசப்பட்டது' என்று காவலர்கள் கூறினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |