மகாராணிக்கு அஞ்சலி செலுத்தவந்த ஆறு பேரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்: அவர்கள் உடைக்குள் மறைத்துவைத்திருந்த விடயம்
பிரித்தானிய மகாராணியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த காத்திருப்போரின் கூட்டம் 4.4 மைல்நீளத்திற்கு நீண்டுள்ளதால் சில மணி நேரத்திற்கு மக்கள் வரிசையில் இணைவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்தவந்த ஆறு பேரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
பிரித்தானிய மகாராணியாரின் உடலுக்கு ஏராளமானோர் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அப்படி அஞ்சலி செலுத்தவந்த ஆறு பேரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
அதற்குக் காரணம், அவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளாகிய நாய்களை தங்கள் உடைக்குள் (Coat) மறைத்துவைத்திருந்ததுதான்.
இந்த செய்தி அறிந்து சிலர் அதை கேலி செய்தாலும், சிலரோ, நாய்களைக் கொண்டு வந்திருப்பது தெரிந்தால் மகாராணியார் சந்தோஷப்பட்டிருப்பார் என்கிறார்கள்.
இந்நிலையில், மகாராணியாருக்கு அஞ்சலி செலுத்தவருவோர், தங்கள் செல்லப்பிராணிகளை தங்களுடன் கொண்டுவந்தால், அவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு தனது இணையதளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.