மேகன் மெர்க்கல் மீது அவதூறு பரப்பிய பிரித்தானிய அதிகாரிகள்: வெளிவரும் முழுமையான பின்னணி
மேகன் மெர்க்கல் மற்றும் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மீது அவதூறு மற்றும் இனவெறி செய்திகளை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக ஆறு முன்னாள் லண்டன் காவல்துறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் காவல்துறை அதிகாரிகள்
இனவெறி மற்றும் பாரபட்சமான உள்ளடக்கம் கொண்ட இந்த கருத்துகள் முற்றிலும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@pmc
மேலும், இந்த அவதூறு கருத்துகளை பகிர்ந்தவர்கள் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் என்பதால், காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2018 ஆகஸ்டு மாதம் முதல் 2022 செப்டம்பர் மாதம் வரையில் தொடர்புடைய 6 அதிகாரிகளும் மேகன் மெர்க்கல் தொடர்பிலும், அரச குடும்பத்து உறுப்பினர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் மூன்று குறுந்தகவலில் மேகன் குறித்து இனவாத கருத்தை பதிவு செய்துள்ளனர். அத்துடன் பிரதமர் ரிஷி சுனக் தொடர்பிலும் அந்த அதிகாரிகள் இனவாத கருத்தை பதிவு செய்துள்ளனர்.
வன்கொடுமை வழக்கில் தண்டனை
தற்போது தண்டனை பெற்றுள்ள அதிகாரிகளில் ஐவருக்கு 60 வயது கடந்துள்ளது. வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் 6 முதல் 14 வாரங்கள் சிறை தண்டனையும், 12 மாதங்களுக்கு அந்த தண்டனையை நிறைவேற்றாமல் இருக்க தடையும் விதித்துள்ளனர்.
@getty
தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள அந்த ஐவரும் காவல்துறையில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும், தூதரகப் பாதுகாப்புக் குழுவில் பணியாற்றியவர்கள்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு முன்னாள் உறுப்பினர் கொலை மற்றும் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்றுள்ளார், மற்றொருவர் இரண்டு தசாப்தங்களாக 24 வன்கொடுமை மற்றும் பிற துஸ்பிரயோக குற்றங்களைச் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |