இளவரசர் பிலிப் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம் இது தான்! மகிழ்ச்சியான தருணம்
இளவரசர் பிலிப் இறப்பதற்கு முன் தன்னுடைய மனைவியும், மகாராணியுமான இரண்டாம் எலிசபத்துடன் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இளவரசர் பிலிப்பின் மரண செய்தியைக் கேட்டு பிரித்தானியர்கள் பலரும் கண்கலங்கினர்.
அது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது இளவரசர் பிலிம் இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், இளவரசர் பிலிப் மற்றும் அவருடைய மனைவி இரண்டாம் எலிசபெத் சோபா ஒன்றில் அமர்ந்து ஏதோ ஒன்றை பார்த்து மகிழ்ச்சியாக பேசிக் கொள்வது போன்று உள்ளது.
அவர்கள் பார்க்கும் அந்த அட்டை தங்களுடைய பேரக்குழந்தைகள், இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லோட் மற்றும் இளவரசர் லூயிஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட அட்டை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் திகதி பிலிப் மற்றும் இரண்டாம் எலிசபெத் தம்பதியினரின் திருமண ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில், வண்ணமயமான அட்டை ஒன்றை அவர்கள் தயாரித்து, அதில் அவர்களின் திருமண வாழ்க்கை ஆண்டுகளான 73-ஐ குறித்து கொடுத்துள்ளனர்.
அதை பிலிப் மற்றும் இரண்டாம் எலிசபெத் பெர்க்ஷயரில் இருக்கும் விண்ட்சர் கோட்டையில் ஒரு சோபாவில் அமர்ந்து பார்ப்பதைக் காணலாம். இங்கு தான் இளவரசர் தன்னுடைய இறுதி மாதங்களை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.