பல தவறுகளைச் செய்தேன்... உண்மையை உடைத்துப் பேசிய சுவிஸ் பெண்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் மறதி நோயால் அவதிப்பட்டதாகவும், அதனால் வேலையை இழந்ததாகவும் சுவிஸ் பெண் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் Lenzburg பகுதியை சேர்ந்த 33 வயதான பீட்ரைஸ் என்பவரே கொரோனா பாதிப்புக்கு பின்னர் தாம் அனுபவித்த இன்னல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் லேசான அறிகுறிகளுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் பீட்ரைஸ். அதில் இருந்து மீண்ட பின்னர் தமக்கு மிக மோசமாக மறதி நோய் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையாக அவதிப்பட்ட பீட்ரைஸ் ஒருகட்டத்தில் தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் எழுதி வைத்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாகவும் பீட்ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தமது அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாகவும் பீட்ரைஸ் தெரிவித்துள்ளார். இது வேலையிலும் பாதிப்பை ஏற்படுத்தவே, ஒரு கட்டத்தில் தம்மை வேலையில் இருந்து நிர்வாகம் நீக்கியதாக பீட்ரைஸ் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் பணியாற்றிய நிறுவனமே உரிய சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளதையும், அதனால் தம்மால் மறதி நோயில் இருந்து மீண்டு வர முடிந்தது என குறிப்பிட்டுள்ளார் பீட்ரைஸ்.
இதே நிலையை பெர்ன் பகுதியில் சைமன் என்ற 40 வயது நபரும் அனுபவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அந்த பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் கடுமையாக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தமது அன்றாட நிகழ்வுகளை எழுதி வைத்துக்கொள்வதாக குறிப்பிட்ட சைமன், ஒரு கட்டத்தில் எழுதி வைத்த குறிப்புகளையும் மறந்து போனதாக தெரிவித்துள்ளார்.