எண்ணெய் உற்பத்தியை குறைத்த குவைத், UAE- விலை 115 டொலராக உயர்வு
ஈரான் போரின் தாக்கம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில், Hyperliquid Futures தரவுகளின்படி, West Texas Intermediate (WTI) எண்ணெய் விலை 90 டொலரிலிருந்து 115 டொலராக திடீரென உயர்ந்தது.
அதேபோல், உலகளாவிய அளவில்பயன்படுத்தப்படும் BrentCrude விலை 117 டொலராக உயர்ந்தது. இது 2022-க்கு பிறகு மிக உயர்ந்த நிலையாகும்.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளும் தங்களது எண்ணெய் உற்பத்தியை குறைத்தது.

குவைத் தினசரி எண்ணெய் உற்பத்தியில் 100,000 பீப்பாய் உற்பத்தியை குறைத்துள்ளது. அதேபோல், தினசரி 3.5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்யும் அமீரகம், ஹார்முஸ் நீரிணையை தவிர்த்து ஏற்றுமதி செய்யும் வழிகளை முன்னிறுத்தி, உற்பத்தியை குறைத்துள்ளது.
இதற்கு முன், ஈரான், சவுதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை குறைத்தன. இதனால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் சேமிப்புகள் சில வரங்களை காலியாகும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், சமீபத்தில் ஈரானின் முக்கிய எரிசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கியதால், ஈரான் ஹைஃபா நகரில் உள்ள இஸ்ரேல் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதனால் போர் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தாலும், எரிசக்தி நிறுவங்களின் பங்குகள் அதிகரித்துள்ளன. Marathon Petroleum, Valero Energy, Phillips 66 போன்ற நிறுவனங்கள் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
போர் நீடித்தால் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்றும், போர் முடிந்தாலோ அல்லது சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கினாலோ விலை குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Crude oil price, Kuwait UAE oil production cut, Brent crude, Middle East oil crisis #CrudeOil #Kuwait #UAE #EnergyCrisis #MiddleEast #BrentCrude