இயற்கை முறையில் நரைமுடி கருப்பாக மாற இந்த எண்ணெய் போதும்: எப்படி தயாரிப்பது?
இன்றைய நாளில் பெரும்பலான இளைஞர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நரை முடி.
நரைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த கலவைகளை பயன்படுத்துவதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
அதற்க்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் உங்கள் நரைமுடி அனைத்தும் கருப்பாக மாறிவிடும்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 200ml
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- மருதாணி- 1 கைப்பிடி
- கரிசிலாங்கண்ணி பொடி- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
பின் அதில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து பொரியவிடவும்.
அடுத்து அதில் ஒன்று இரண்டாக அரைத்து வைத்துள்ள மருதாணி இலையை செத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்தி காய்ச்சவும்.
நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறியதும் அதில் கரிசிலாங்கண்ணி பொடியை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்ட வேண்டும்.
இந்த எண்ணெய்யை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தி வந்தாலே நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |