உலகிலேயே மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழும் தீவு இதுதான்! வெளியான வாழ்க்கைமுறை ரகசியம்
ஜப்பானின் தீவு தேசமான ஒகினாவாவில் தான் உலகிலேயே மக்கள் மிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
அதிசய தீவு
ஜப்பான் மற்றும் தைவான் நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ஒகினாவா தீவு. இந்த தீவு Blue Zone என்று அழைக்கப்படும் ஐந்து பகுதிகளில் ஒன்றாகும்.
IDFCP
இதற்கு காரணம், இங்கு அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக, இந்த தீவில் தான் வேறு எங்கும் இருப்பதை விட 100 வயதை தாண்டிய மக்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்.
ALESSANDRO GANDOLFI, PARALLELOZERO/INSITITUTE
ஒகினாவா தீவில் 2020ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, பெண்களின் சராசரி ஆயுட்காலம் 87.44 ஆண்டுகள் மற்றும் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 80.27 ஆண்டுகள் என தெரிய வந்தது.
நீண்ட ஆயுளின் ரகசியம்
ஒகினாவா மக்கள் எப்போதும் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கிறார்கள். இது அவர்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதன் ரகசியம் ஆகும்.
அதேபோல் இந்த தீவின் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தாலும், இங்கும் அங்குமாக நகர்ந்து கொண்டே இருப்பார்களாம், இது அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் காரணமாம்.
கடற்பாசி, பச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை முதன்மை உணவுகளாக உட்கொள்வதால் ஒகினாவா மக்களின் நீண்ட ஆயுள் ரகசியம் ஆகும்.
இந்த தகவல்களை எல்லாம் Drew Binsky என்ற யூடியூப் பிளாகர் (Youtube Blogger) ஒகினாவா தீவுக்கு சென்று படம் பிடித்து வெளியுலகிற்கு காட்டியுள்ளார்.
Instagram
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |