ஓடும் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து.,காட்டுமிராண்டிபோல் கதறிய கைதி (வைரல் வீடியோ)
அமெரிக்காவில் கைதி ஒருவர் ஓடும் சிறைச்சாலை வாகனத்தின் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது பிற வாகன ஓட்டிகளை திகைப்பில் ஆழ்த்தியது.
கைவிலங்கு பூட்டப்பட்ட கைதி
அமெரிக்காவின் Oklahoma நகரில் புகழ்பெற்ற ஸ்கைடான்ஸ் பாலம் அருகே நடந்த நிகழ்வு செல்போன் வீடியோவாக பதிவானதால் வைரலாகியுள்ளது.
மாநில சிறைச்சாலை வாகனத்தின் உடைந்த பின்புற சன்னலில், சட்டை அணியாத கைதி கைவிலங்கு பூட்டப்பட்ட நிலையில் தொங்கிக்கொண்டிருந்தார்.
காட்டுமிராண்டித்தனமாக அவர் நடந்துகொண்டது பிற வாகன ஓட்டிகளுக்கு திகைப்பை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், குறித்த வாகனம் நெடுஞ்சாலையில் செல்லும்போது, அவர் கடந்து செல்லும் ஓட்டுநர்கள் அனைவரிடமும் கெஞ்சுவதுபோல் தோன்றியது.
இதனை பின்னால் வந்த காரில் இருந்து வீடியோவாக படம்பிடித்த டிகின் மார்ட்டின் என்பவர் கூறுகையில், 'நாங்கள் அவரைப் பார்த்தபோது, நாங்கள் அனைவரும் ஐயோ! கடவுளோ என்று நினைத்தோம். ஆரம்பத்தில் அந்தக் காட்சி ஒரு குறும்புத்தனமாக இருக்கலாம் அல்லது ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என நம்பினோம்' என்றார்.
இந்த சம்பவம் பல கோணங்களில் பதிவு செய்யப்பட்டது. சில பார்வையாளர்கள் அந்த காட்சிகள் போலியானதா என்று யோசித்துள்ளனர். ஆனால் மாநில அதிகாரிகள் விரைவில் அது அனைத்தும் உண்மையானது என்பதை உறுதிப்படுத்தினர்.
சிறைச்சாலைத்துறை
மேலும் இதுதொடர்பாக வெளியான அறிக்கையொன்றில், Oklahoma சிறைச்சாலைத்துறை சம்பவத்தை ஒப்புக்கொண்டது மற்றும் கைதி வாகனத்திற்கு சேதம் விளைவித்து பின்புறத்தைத் தொங்கவிடத் தொடங்கியபோது, வாகனம் வழக்கமான போக்குவரத்தில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.
தங்கள் அதிகாரிகள் உடனடியாக நிலைமையை உணர்ந்து, நெடுஞ்சாலையை விட்டு வெளியேறி, கூடுதல் சட்ட அமலாக்க ஆதரவைக் கோரியதாக சிறைச்சாலைத்துறை கூறியது.
எனினும், கைதியின் அடையாளத்தை வெளியிட மறுத்ததுடன் அவர் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிப்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |