முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் Ola Electric.!
மின்சார இரு சக்கர வாகன சந்தையில் கொடிக்கட்டிப்பறக்கும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யத் தயாராக உள்ளது.
EV இருசக்கர வாகனங்களில் Ola Electric நிறுவனம் 30 சதவிகித சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
S1 Pro, S1 Air மற்றும் S1X ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் (electric scooters) சந்தையில் நுழைந்திருக்கும் ஓலா எலக்ட்ரிக், அடுத்த நிதியாண்டின் (2025-26) முதல் பாதியில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை (electric motorcycle) அறிமுகப்படுத்த உள்ளது.
2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் Diamond Head, Adventure, Roadster மற்றும் Cruiser மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
கடந்த ஆண்டு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், M1 Cyber Racer கான்செப்ட்டில் Ola Cruiser, Ola Adventure, Ola Roadster மற்றும் Ola Diamond Head என நான்கு மோட்டார் சைக்கிள்களை காட்சிப்படுத்தியது.
ஓலா ரோட்ஸ்டர், chunky tyres, USD forks மற்றும் twin disc brake setup-புடன் கூடிய alloy wheelகளுடன் வருகிறது. மேலும், Sleek wrap round LED headlamp, integrated LED blinkers மற்றும் பிற அம்சங்களுடன் வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதை நோக்கி நகர்வதாக தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக மின்சார மோட்டார்சைக்கிள் பிரிவில் விரிவடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ola Electric Motorcycle, Ola Electric launch first electric motorcycle, Ola Cruiser, Ola Adventure, Ola Roadster, Ola Diamond Head