Ola Electric S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.26,750 வரை தள்ளுபடி!
Ola Electric தனது S1 மொடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ.26,750 வரை தள்ளுபடியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த சலுகைகள் மார்ச் 17 வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
தள்ளுபடி விவரங்கள்
- S1 Air மொடலுக்கு ரூ.26,750 தள்ளுபடி
- S1 X+ மொடலுக்கு ரூ.22,000 தள்ளுபடி
- அனைத்து Gen 2 ஸ்கூட்டர்களுக்கும் MoveOS+ ஒரு ஆண்டுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.
கூடுதல் சலுகைகள்
- பேட்டரி வாரண்டி - 50% தள்ளுபடி
- 8 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிலோமீட்டர் வரை விரிவாக்கிக்கொள்ளலாம்.
- Accessories - 40% தள்ளுபடி
இந்த சலுகைகளைப் பற்றி மேலும் அறிய அதிகாரப்பூர்வ Ola டீலர்ஷிப்புகளை அணுகலாம்.
MoveOS 5 - புதிய அம்சங்கள்
Ola Electric தனது Gen 3 மொடல்களில் MoveOS 5 இயக்குதளத்துடன் அறிமுகமாகிறது. இதன் சில முக்கிய அம்சங்கள்:
DIY Mode: Throttle sensitivity மற்றும் regenerative braking-ஐ பயனர் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்.
Smart Park: பார்க்கிங் வசதியை எளிதாக்க, தானாகவே வேகத்தையும் throttle response-யும் கட்டுப்படுத்தும்.
Smartwatch App: ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்கூட்டரை Unlock செய்யலாம். மேலும், Boot remote access மற்றும் real-time status updates போன்ற வசதிகளும் உள்ளன.
Road Trip Mode: குழுவாக பயணிக்க உதவும் வசதி. ரைடர்கள் இடங்களை பகிர்ந்து, நெவிகேஷன் உதவி பெறலாம்.
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிடுபவர்கள், இந்த Ola Electric சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |