புதிய நிதி திரட்டும் திட்டத்துடன் Ola Electric
ஓலா (Ola Electric) நிறுவனம், வரும் அக்டோபர் 25-ஆம் திகதி நடைபெறவுள்ள வாரியக் கூட்டத்தில் புதிய நிதி திரட்டும் திட்டத்தை பரிசீலிக்கவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பங்கு வெளியீடு அல்லது பிற நிதி சாதனங்கள் மூலம் முதலீடு பெறும் வாய்ப்புகள் ஆராயப்படவுள்ளன.
கடந்த ஆண்டு IPO மூலம் ரூ.5,500 கோடி திரட்டியது குறிப்பிடத்தக்கது.
மே 2025-ல், நிறுவனம் ரூ.1,700 கோடி வரை கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட வாரிய ஒப்புதல் பெற்றிருந்தது.
மேலும், ola cell technologies துணை நிறுவனத்திற்கு ரூ.877.6 கோடி மதிப்பில் முன்னுரிமை பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், நிறுவனத்தின் நிதி நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளாகும்.
அக்டோபர் 16-ஆம் திகதி, ஓலா தனது முதல் வாகனமல்லாத தயாரிப்பான "ஓலா சக்தி" எனும் பேட்டரி சேமிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது, எலக்ட்ரிக் வாகன துறையைத் தாண்டி, சக்தி சேமிப்பு சந்தையில் நுழையும் முக்கிய முயற்சியாகும்.
இந்நிறுவனம் சமீபத்தில் விற்பனை குறைவு, வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் போன்ற சவால்களை எதிர்கொண்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில், சந்தை பங்கில் 13.2 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. மேலும், ஒரு பணியாளரின் தற்கொலை சம்பவம் தொடர்பான வழக்கில், நிறுவனம் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிதி திட்டம், ஓலா எலக்ட்ரிக்கின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
ola electric funding october 2025, ola electric board meeting, ola shakthi battery launch, ola ipo performance 2025, ola electric equity issue, ola electric preferential shares, ola cell technologies investment, ola electric controversies 2025, ola electric market share drop, ola electric vs ather energy