Ola-வில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்., ஆச்சரியமளிக்கும் ஆரம்ப விலை..!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பிரபலமான மின்சார இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான Ola Electric ஒரு படி முன்னேறியுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இதுவரை நான்கு மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இப்போது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் Roadster என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ.74,999 முதல் தொடங்குகிறது.
இது Roadster, Roadster X மற்றும் Roadster Pro ஆகிய மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டும் துணை வகைகளில் கிடைக்கின்றன.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் வியாழக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு 'சங்கல்ப் 2024' நிகழ்வில் பேசினார். அப்போது அவர் ரோட்ஸ்டர் மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்தார்.
ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் ஜனவரி 2025 முதல் தொடங்கும். ரோட்ஸ்டர் புரோ மற்றும் ரோட்ஸ்டர் எக்ஸ் வேரியண்ட் மோட்டார் சைக்கிள்கள் அடுத்த ஆண்டு தீபாவளி முதல் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட்ஸ்டரின் 3.5kWh வேரியண்டின் விலை ரூ.1.04 லட்சம், 4.5kW வேரியண்டின் விலை ரூ.1.19 லட்சம், மற்றும் 6kW வேரியண்டின் விலை ரூ.1.39 லட்சம்.
இந்த மோட்டார் சைக்கிள்களின் விநியோகம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டின் தொடக்கத்தில் இருந்து தொடங்கும் என்று பவிஷ் அகர்வால் கூறினார்.
ரோட்ஸ்டர் எக்ஸ் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கும். 2.5kW Roadster X வேரியண்டின் விலை ரூ.74,000, 3.5kW Roadster X வேரியண்டின் விலை ரூ.85,000 மற்றும் 4.5kW Roadster X வேரியண்டின் விலை ரூ.99,000 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Roadster, Roadster X மற்றும் Roadster Pro, Ola Electric launches e-motorcycle series, Roadster starting price Rs 74,999