24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட OLA
24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட S1 Pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரை OLA நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் அதன் EV வரிசையின் சிறந்த மாடலான S1 Pro-வின் Gold Edition-ஐ வெளியிட்டுள்ளது.
Ola S1 Pro Sona என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் limited Edition ஆகும்.
இந்த ஸ்கூட்டர் S1 Pro-வை அடிப்படையாகக் கொண்டது மற்றும் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட கூறுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கூட்டரின் கண்ணாடி கைப்பிடி, பிரேக் லீவர், சைடு ஸ்டாண்ட், பில்லியன் ஃபுட்ரெஸ்ட் மற்றும் கிராப் ரெயில் ஆகியவை 24 காரட் பூசப்பட்டுள்ளன. இது தவிர ஸ்கூட்டரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இல்லை.
இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை IDC Range கிடைக்கும். வரையறுக்கப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25 வரை பண்டிகை பிரச்சாரத்தையும் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு S1 Pro Sona Edition-ஐ வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
S1 Pro Gold Edition, Ola S1 Pro Sona Edition, S1 Pro limited Edition