இனி Google Map இல்லை.. Ola Map தான்! இதனால் ரூ.100 கோடி மிச்சமாம்
ஓலா (Ola ) நிறுவனம் கூகுள் மேப்பிற்கு பதிலாக தனது சொந்த தொழில் நுட்பமான ஓலா மேப் ( Ola Map) முறையை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.
தற்போதைய காலங்களில் பெரு நகரமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி சாலை வழியை தெரிந்து கொள்வதற்காக Google Map-யை தான் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஓலா நிறுவனம் பயணங்களில் வழிகாட்டியாக Google Mapயை பயன்படுத்தி வந்த நிலையில், Ola Map முறைக்கு மாறுவதாக அறிவித்துள்ளது.
Ola Map
ஓலா நிறுவனம் இனி தனது பயணங்களின் வழிகாட்டியாக Ola Map -யை பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் கூறுகையில், "இதனால் ஓலா நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாயை சேமிக்கும். இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன.
Street View, Indoor Image, NERF Features, Drone Maps, 3D Images ஆகியவை சேர்க்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் அஸூர் (Microsoft Azure) என்னும் Cloud computing சேவைக்கு பதிலாக ஓலா தனது சொந்த AI நிறுவனமான க்ரூடிம் (Krutim) நடைமுறைக்கு மாறுவதாக அறிவித்தது.
அதேபோல Google மேப்பிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டோம். இதனால், நாங்கள் வருடத்திற்கு ரூ.100 கோடி செலவு செய்தோம். தற்போது ஓலா மேப் முறைக்கு மாறியதால் இதன் செலவு பூஜ்ஜியமாக உள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |