லொட்டரியில் பரிசு கிடைப்பதற்காக ஆறு மாதங்களுக்கொருமுறை ஆறு பெண்களை கொல்ல திட்டமிட்ட நபர்: ஒரு கொடூர சம்பவம்
தனக்கு லொட்டரியில் பெருந்தொகை பரிசாக கிடைக்கவேண்டும் என்பதற்காக ஆறு மாதங்களுக்கொருமுறை ஆறு பெண்களை கொல்வதாக உறுதி எடுத்துக்கொண்ட ஒரு நபர், இரண்டு சகோதரிகளைக் கொலை செய்துவிட்டார்.
Bibaa Henryயும் (46) அவரது சகோதரியுமான Nicole Smallmanம் (27), Bibaaவின் பிறந்தநாளைக் கொண்டடுவதற்காக வடக்கு லண்டனிலுள்ள பூங்கா ஒன்றிற்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், பொலிசார் ஒரு பக்கம் தேட, Nicoleஇன் காதலரான Adam Stone, புதர்களுக்குள் தன் காதலி மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரியின் உடல்கள் கிடப்பதைக் கண்டுபிடித்தார்.
அதன்பிறகு பொலிசார் அங்கு கிடந்த ஒரு கத்தி, மற்றும் பெண்கள் இருவரின் உடலிலும் சம்பந்தமில்லாத ஒரு ஆணின் DNA இருப்பதைக் கண்டறிந்து அதை வைத்து குற்றவாளியைத் தேட, Danyal Hussein (19) என்ற இளைஞன் சிக்கினான்.
ஆவிகள் தொடர்பில் ஆர்வம் கொண்ட Danyal, தனக்கு லொட்டரியில் 321 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைக்கவேண்டும் என்பதற்காக ஆவிகளுடன் ஒப்பந்தம் செய்தது தெரியவந்தது. ஆறு மாதங்களில் ஆறு பெண்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்த Danyalஇடம், பிறந்தநாள் கொண்டாடப் போன சகோதரிகள் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
Bibaaவை எட்டு முறை கத்தியால் குத்திய Danyal, பிறகு Nicoleஐ 28 முறை கத்தியால் கீறியிருக்கிறான்.
நீண்ட நாட்களாக நடந்து வந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. Danyalக்கு 35 ஆண்டுகள் சிறையிலிருந்து வெளியே வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பையடுத்து, தன் பிள்ளைகளின் இழப்புக்கு நீதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த பெண்களின் தாயாகிய Mina Smallman, 35 ஆண்டுகள் அவன் வெளியே வரமாட்டான், அதற்குப் பிறகும் அவனை வெளியே வரவிடமாட்டேன். அவன் சிக்கவில்லையென்றால் மேலும் சில பெண்களைக் கொன்றிருப்பான் என்று கூறியுள்ளார்.