ஸ்கொட்லாந்தில் நகரின் நடுவே துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் தெரிய வந்த விடயம்
ஸ்கொட்லாந்தின் எடின்பர்க் நகரில் பேருந்து மோதிய விபத்தில், முதியவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தலை துண்டிக்கப்பட்டு இறப்பு
தலைநகர் எடின்பர்க்கில் சனிக்கிழமையன்று, சாலை விபத்தில் நபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட இறந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து மோதிய விபத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என்றும், அவர் 74 வயது முதியவர் என்றும் தெரிய வந்தது.
பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை
இரவு 7.25 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. பொலிஸார் பல சாலைகளை மூடி விசாரணைக்கு பின்னர் திறந்தனர்.
இந்த துயர சம்பவம் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காவல்துறையைச் சேர்ந்த சார்ஜெண்ட் லூயிஸ் பிர்ரெல் கூறுகையில், "எங்கள் எண்ணங்கள் இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. இந்தச் சம்பவத்தின் முழு சூழ்நிலையையும் கண்டறிய விரிவான விசாரணைகள் நடந்து வருகின்றன" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |