தொப்புள் கொடி கூட அகற்றப்படாத குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்... கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி

investigation United States
By Balamanuvelan Jan 11, 2022 06:58 AM GMT
Report

தான் பெற்ற குழந்தையையே இளம்பெண் ஒருவர் குப்பைத்தொட்டியில் வீசுவதைக் காட்டும் அதிர்ச்சியளிக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (ஜனவரி 7ஆம் திகதி), அமெரிக்காவிலுள்ள New Mexico என்ற இடத்தில், குப்பைத்தொட்டிகளில் பயனுள்ள பொருட்கள் ஏதாவது கிடைக்குமா என்று தேட வந்த சிலர் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்தித்தனர்.

Michael Green, Hector Jesso மற்றும் April Meadow என்னும் அந்த மூவரும் ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டிகளை சோதித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ முனகல் சத்தம் கேட்டுள்ளது. அது பூனைக்குட்டி அல்லது நாய்க்குட்டியாக இருக்கலாம் என்று எண்ணி தேடிப் பார்க்கும்போது, பை ஒன்றிற்குள் ஒரு குழந்தை இருப்பதைக் கண்டு திடுக்கிட்டுள்ளார்கள் அவர்கள்.

உடனே, அவர்களில் ஒருவரான April என்றபெண், கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையை வாரி எடுத்து அணைத்துக்கொண்டிருக்கிறார்.  

உடனடியாக அவர்கள் பொலிசாருக்கு தகவலளித்திருக்கிறார்கள். மீட்புகுழுவினருடன் வந்த பொலிசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, குழந்தையைக் காப்பாற்ற விரைந்து செயல்பட்ட அந்த மூவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

அந்த அழகான ஆண் குழந்தை, தொப்புள் கொடி கூட அகற்றப்படாமல், சுமார் ஆறு மணி நேரம் கடுங்குளிரில் கிடந்ததால், ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதற்கு இரத்தம் ஏற்றி, குழாய் மூலம் உணவும் ஆக்சிஜனும் செலுத்தி, சிகிச்சையளித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசியது யார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCYV கமெராவைப் பரிசோதிக்கும்போது, காரில் வந்த இளம்பெண் ஒருவர் ஒரு பையை குப்பைத் தொட்டியில் வீசுவது தெரியவந்துள்ளது.


பொலிசார் அந்தப் பெண்ணைத்தேட, குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசியது Alexis Avila (18) என்ற இளம்பெண் என்பது தெரியவந்ததுun.

பொலிசார் அந்தப் பெண்ணை கைது செய்தார்கள்.

விசாரணையில், தனது பதின்ம வயதில் உள்ள ஒரு பையனுடன் Avila பழகியிருக்கிறார். நெருங்கிப் பழகியபின் கடந்த ஆகத்து மாதம் இருவரும் பிரிந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வயிறு வலி காரணமாக மருத்துவரைப் பார்க்கச் சென்றிருக்கிறார் Avila.

அவரைப் பரிசோதித்த மருத்துவர், Avila கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அதுவரை Avilaவுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரியாதாம்!

வீட்டுக்கு வந்த Avila, தன் பெற்றோர் வீட்டுக் குளியலறையில் குழந்தையை பிரசவித்திருக்கிறார். கர்ப்பமாக இருப்பதே தெரியாத நிலையில் திடீரென குழந்தை பிறந்ததால் தான் திகிலடைந்ததாகவும், குழந்தையை ஒரு துணியில் சுற்றி, குப்பை போடும் கவரில் போட்டு குப்பை தொட்டியில் வீசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

அவர் மீது கொலைமுயற்சி, மற்றும் குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.  

தொப்புள் கொடி கூட அகற்றப்படாத குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்... கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி | Old Mother Tosses Newborn Baby Dumpster

தொப்புள் கொடி கூட அகற்றப்படாத குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசும் தாய்... கமெராவில் சிக்கிய அதிரவைக்கும் காட்சி | Old Mother Tosses Newborn Baby Dumpster



5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US