80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றலாம்: எலிகளின் மீதான சோதனையில் விஞ்ஞானிகள் நம்பிக்கை
எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனை 70% வெற்றி அடைந்ததால், இச்சோதனை மனிதர்கள் மீது நடத்தப்பட்டால் முதியவரை இளைஞராக மாற்ற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எலிகளின் சோதனை70% வெற்றி
தற்போதைய நவீன காளத்தி ஏதாவது ஒரு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்தவகையில் 53 வயதுடைய பெண்ணின் திசுவை 23 வயதாக குறைக்கின்ற ஆராய்ச்சிகள் வெற்றி அடைந்துள்ளன.
அதே போல, மனிதனின் மரபணுவில் மாற்றம் கொண்டு வந்து உயிரியல் ரீதியாக நமது உடல் உறுப்புகளின் வயதை குறைப்பதை பற்றிய சோதனை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் செய்தனர்.
ஆசிய நாடொன்றின் குடிசை பகுதிக்குள் நுழையும் அதானி குழுமம்: மறுகுடியமர்வு செய்யப்படும் லட்சக்கணக்கான மக்கள்
அவர்கள், வயதான எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் 70 சதவீதம் வெற்றி அடைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விஞ்ஞானிகள் நம்பிக்கை
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் நானோ துகள்களை எடுத்து வயதான எலிக்கு செலுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், வயது எதிர்ப்பு சிகிச்சையானது 70 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது.
எலியின் மரபணுவில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும், இதயம் மற்றும் கல்லீரலின் வயது பாதியாக குறைந்துள்ளது. இச்சோதனையை மனிதர்கள் மீது நடத்தினால் 80 வயது முதியவரை 26 வயது இளைஞராக மாற்றலாம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மனிதர்கள் மீது இச்சோதனையை நடத்தினால் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |