சுவிஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் பற்றிய தீ: இளம் தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த சோகம்
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பற்றிய தீ, இளம் தாய் ஒருவரையும், அவரது பதின்ம வயது மகனையும் பலிகொண்டுவிட்டது.
தீயில் சிக்கிய தாயும் மகனும்
கடந்த வியாழக்கிழமை, ஜெனீவாவிலுள்ள Lignon என்னுமிடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் தீப்பற்றியுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்த நிலையில், கட்டிடத்திலிருந்து வெளியேறுவதற்கான படிக்கட்டுகளில், படுகாயமடைந்த நிலையில் ஒரு 28 வயது பெண்ணும், அவரது மகனான 13 வயது சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
DayFR Euro
தீயிலிருந்து தப்பி வெளியேற முயலும்போது அவர்கள் தீயில் சிக்கியுள்ளது பின்னர் தெரியவந்தது.
தற்போது கிடைத்துள்ள செய்தி
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் கடந்த வாரம் உயிரிழந்துவிட்டான். தற்போது, சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம் தாயும் சனிக்கிழமையன்று உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
தாயும் மகனும் தீயில் சிக்கி பலியான விடயம் அப்பகுதியில் சோகத்தை உருவாக்கியுள்ள நிலையில், எதனால் தீப்பற்றியது என்பது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |