அவுஸ்திரேலியாவில் சோகத்தில் முடிந்த சொகுசு கப்பல் பயணம்: 80 வயது மூதாட்டி சடலமாக மீட்பு
தொலைதூர தீவில் 80 வயது மூதாட்டி கப்பல் விட்டுச் சென்ற பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூதாட்டியை விட்டுச் சென்ற கப்பல்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் உள்ள லிசார்ட் தீவில்(Lizard Island) 80 வயது மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியரான 80 வயது மூதாட்டி, கோரல் அட்வென்ச்சார்(Coral Adventurer) என்ற சொகுசுப் பயணக் கப்பலில் 60 நாள் சொகுசுப் பயணத்தில் இருந்தார்.
சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பயணத்தின் ஒரு பகுதியாக லிசார்ட் தீவுக்கு சென்றிருந்தது, பின் அங்கிருந்த புறப்பட்ட சொகுசு பயணக்கப்பல் மூதாட்டியை கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளது.
இந்நிலையில் 80 வயது மூதாட்டி அந்த தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் வழங்கிய தகவலின் படி, மூதாட்டி மலையேற்றத்தின் போது கப்பல் குழுவை விட்டு பிரிந்து சென்றுள்ளார். அவர் ஓய்வெடுக்க நின்ற போது மற்ற கப்பல் பயணிகளிடம் இருந்து பிரிந்துள்ளார்.

மூதாட்டி உயிரிழந்த நிலையில் கப்பல் நிறுவனம் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணையை குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |