75 வயதில்.. வாரத்தில் 6 நாட்கள் ஊரை சுற்றும் பிரித்தானிய பெண்மணி! என்ன காரணம் தெரியுமா?
பிரித்தானியாவில் மூதாட்டி ஒருவர் இலவச பாஸ் பயன்படுத்தி வாரத்தில் 6 நாட்களும் சந்தோஷமாக ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் Penny Ibbott(75). இவர் பெண் பென்சன் தாரர்களுக்கான இலவச பஸ் பாஸ் அரசிடமிருந்து முறையாக பெற்று உள்ளார்.
இதை வைத்து கொண்டு இவர் வாரத்தில் உள்ள ஏழு நாட்களில், சுமார் 6 நாட்களும் பேருந்தில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். Penny Ibbott இந்த பயணத்தை கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியுள்ளார்.
ஆனால் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததால் இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தனது பயணத்தை சில நாட்கள் ஒதுக்கிவைத்து விட்டு வீட்டிலே நாட்களை கழித்தார்.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் அரசிடம் இருந்து பெற்ற இலவச பாஸ் மூலம் பேருந்தில் பயணம் செய்து வருகிறேன். இந்த இலவச பஸ் பாஸ் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
பணம் எதுவும் கொடுக்காமல் இதுவரை 120 பேருந்துகளில் 3500க்கும் அதிகமான முறை பயணம் செய்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் தான் உயிரோடு இருக்கும் வரை இன்னும் பல இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் கூறியுள்ளது அனைவரையும் ஆச்சிரியத்தில் மூழ்கியுள்ளது.