90 வயதிலும் இளமையின் உச்சம்! நம்பிக்கை விதைக்கும் உலகின் மிக வயதான பாடி பில்டர்
ஜிம் ஆரிங்டன் தன்னுடைய 90 வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து உலகின் மிகவும் வயதான பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
வயது வெறும் எண்கள் மட்டுமே
உலகில் தற்போது வாழ்ந்து வரும் 80 வயதினை நெருங்கிய பெரும்பாலான முதியவர்கள் இருந்த இடத்தை விட்டு சுயமாக நகரவே மிகுந்த பாடாய் பட்டு வருகின்றனர்.
அப்படி இருக்கையில் ஜிம் ஆரிங்டன் என்ற 90 வயதுடைய முதியவர் ஒருவர் தன்னுடைய உடற்பயிற்சி மூலம் உடலை கட்டுக்கோப்புடன் வைத்து அனைவருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருகிறார்.
Jim Arrington recently turned 90.
— Guinness World Records (@GWR) July 19, 2023
He's still swole. pic.twitter.com/ZZlVXdHXhT
ஜிம் ஆரிங்டன் தற்போது உள்ள உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கி இளைஞர்களை சிறப்பான இடத்தை நோக்கி முன்னிலையில் வழிநடத்துகிறார்.
ஜிம் ஆரிங்டன் தன்னுடைய 90 வயதில் உலகின் மிகவும் வயதான பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார், அத்துடன் சமீபத்தில் இதற்காக உலக கின்னஸ் சாதனை பட்டமும் பெற்றுள்ளார்.
இணையவாசிகள் புகழாரம்
இந்நிலையில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு ஜிம் ஆரிங்டனின் வாழ்க்கை மற்றும் நீண்ட கால இளமையின் ரகசியங்கள் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில் ஜிம் ஆரிங்டன் தன்னுடைய தினசரி உடற்பயிற்சி முறைகள், உணவு முறைகள், நம்ப முடியாத வகையிலான உடற்கட்டமைப்பின் நுண்ணறிவு ஆகியவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அத்துடன் இந்த வீடியோவில் சிறுவயது முதல் தன்னை எந்த காரியங்கள் உடற்கட்டமைப்பை நோக்கி அழைத்து சென்றது என்பதையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பல இணையவாசிகள் ஜிம் அரிங்டனை புகழ்ந்து வருவதுடன், அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |