மூடப்படும் பிரித்தானியாவின் மிகப் பழமையான இந்திய உணவகம்
பிரித்தானியாவில் செயல்பட்டுவரும், பல பெருமைகளுக்கு சொந்தமான இந்திய உணவகம் ஒன்று கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு மூடப்படும் நெருக்கடியை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச குடும்பத்திற்கு சொந்தமானது
கடந்த 1926 முதல் செயல்பட்டுவரும் வீராசாமி உணவகமே தற்போது குத்தகை விவகாரம் தொடர்பில் மூடப்படும் நிலையில் உள்ளது. பிரித்தானியாவில் செயல்படும் இந்திய உணவகங்களில் மிகப் பழமையானது என்பதுடன், அதன் உணவு வகைகளுக்காக பல பிரபலங்களையும் ஈர்த்து வந்துள்ளது.
பிரித்தானிய இளவரசி ஆன், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவும் கூட வீராசாமி உணவகத்தில் உணவருந்தியுள்ள பிரபலங்களில் சிலர்.
இந்த உணவகம் அமைந்துள்ள பகுதியானது பிரித்தானிய அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்பதால், தற்போது குத்தகை விவகாரத்தில், வீராசாமி உணகவம் மூடப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் குத்தகை காலாவதியாகும் நிலையில், பிரித்தானிய அரச குடும்ப நிர்வாகிகள் புதுப்பிக்க வாய்ப்பில்லை என அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
குத்தகை புதுப்பிக்க வாய்ப்பில்லை என்ற கிரவுன் எஸ்டேட் நிர்வாகிகளின் முடிவு கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வைத் தந்ததாக 81 வயதாகும் ரஞ்சித் மத்ரானி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு வருடம் முன்பு கட்டிடத்தில் அதிக இடத்தை விரிவுபடுத்த விரும்புகிறீர்களா என்று கிரவுன் எஸ்டேட் நிர்வாகிகள் விசாரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுமதி மறுத்துவிட்டதாக
ஆனால், கட்டிடத்தின் மேல் தளங்களுக்கான அலுவலக நுழைவாயிலை மேம்படுத்த இடம் தேவை என்று மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, முழு வளாகத்தையும் முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என்றும், வீராசாமியின் நுழைவாயில் பகுதி குறுக்கே இருப்பதாகவும், அதை நீக்கினால் கூடுதலாக 11 சதுர மீற்றர் கிடைக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
சொந்தமாக நுழைவாயில் இல்லாமல் உணவகம் செயல்படுவது கடினம் என்ற நிலையை எட்டியுள்ளது. கட்டிட மேலாளர்களின் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றே வீராசாமி உணவ உரிமையாளரான மத்ரானி கூறுகிறார்.
மட்டுமின்றி, புதிய இடம் கிடைக்கும் வரை உணவகம் தொடர்ந்து செயல்பட கிரவுன் எஸ்டேட் நிர்வாகிகள் அனுமதி மறுத்துவிட்டதாக அவர் கூறுகிறார். இதன் காரணமாக மூடப்படுவதை விட வேறு வழியில்லை என்றே மத்ரானி கூறுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |